கெனிஷா - ஜெயம் ரவி
கெனிஷா - ஜெயம் ரவி

“ஜெயம் ரவியுடன் இதுவரை காதல் இல்லை... இனி நடந்தால் மீடியாக்கள்தான் காரணம்'' - கெனிஷா

ஜெயம் ரவி - கெனிஷா காதல்தான் ஆர்த்தியைவிட்டு பிரிவதற்கு காரணம் என சமூக வலைதளங்களில் செய்தி பரவிவரும் நிலையில் இதுகுறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கெனிஷா பிரான்சிஸ்.
Published on

மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கும் ஜெயம் ரவி, நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கிடையே அடையாறு துணை கமிஷ்னர் அலுவலகத்தில் ஆர்த்தி தன் உடைமைகளைப் பறித்தது வைத்துக்கொண்டு தரமறுப்பதாக புகாரும் அளித்திருக்கிறார்.

இதற்கிடையே ஆர்த்தி - ஜெயம் ரவிக்கு இடையேயான பிரிவே கெனிஷா எனும் பாடகியால்தான் எனும் செய்திகள் பரவிவரும் நிலையில் இதுகுறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கெனிஷா.

DTNEXT செய்தி தளத்ததுக்குப் பேட்டியளித்திருக்கும் கெனிஷா, ''நான் மனதளவில் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஹீலிங் செய்துவருகிறேன். அதுபோன்றதொரு க்ளையன்ட்டாக என்னைத் தேடி கோவாவுக்கு சென்னையில் இருந்தே கார் ஓட்டியபடி கோவாவுக்கு வந்தார் ஜெயம் ரவி. அவர் அவரது மனைவி ஆர்த்தியாலும், ஆர்த்தி குடும்பத்தினராலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.

கெனிஷா பிரான்சிஸ்
கெனிஷா பிரான்சிஸ்

அதனால் உடனடியாக நான் அவரை என்னுடைய க்ளையன்ட்டாக சேர்த்துக்கொண்டேன். சென்னையில் இருக்கும் யாருக்கும் தெரியக்கூடாது என்பதால்தான் அவர் அவ்வளவு தூரம் வந்தார்.

எனக்கும் ஜெயம் ரவிக்கும் எந்த காதல் உறவும் இல்லை. ஆனால், வருங்காலத்தில் அப்படி ஏதும் எங்களுக்கு நிகழ்ந்தால் அதற்கு மீடியாக்கள்தான் காரணம். நான் சிறுவயதிலேயே என் பெற்றோரை இழந்தவள். ஆனால், அந்த வலியைவிடவும் ஜெயம் ரவி அவரது மனைவியாலும், அவரது பெற்றோராலும் அனுபவத்த வலி கொடூரமானது. சிகிச்சையின்போது அவர் சொன்ன விஷயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் ஆதாரங்களோடு சொல்வேன்.

ஆர்த்தி தன் மீதான தவறுகளை மறைக்க என்னை பலியாடு ஆக்க நினைக்கிறார். நான் இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இது தொடர்ந்தால் அவர் மீது சட்டபடி மான நஷ்ட வழக்குத் தொடருவேன்'' எனப் பேசியிருக்கிறார் கெனிஷா.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com