மோகன்லால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... மலையாள திரையுலகில் என்ன நடக்கிறது?!

மோகன்லால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... மலையாள திரையுலகில் என்ன நடக்கிறது?!

மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் மோகன்லால் உள்பட 16 உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
Published on

ஹேமா கமிட்டி அறிக்கையின் எதிரொலியாக மலையாள நடிகர்கள் சங்கத் தலைவரான நடிகர் மோகன்லால் உள்பட 16 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். மேலும், மலையாள நடிகர்கள் சங்கம் கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை கேரள திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனை அடுத்து பல நடிகர்கள் மீது பாலியல் தொல்லை புகார்கள் எழுந்தது. இயக்குநர்- மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மற்றும் ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இத்தனை நெருக்கடிகள் இருந்தபோதும் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் நடிகர் மோகன்லால் அமைதி காத்தது பெரும் சர்சையைக் கிளப்பியது. இன்று ‘அம்மா’ அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மோகன்லால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரோடு 16 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இன்னும் 2 மாதங்களில் தேர்தல் முடிந்து புதிய குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com