சோபிதா துலிபாலா - நாக சைதன்யா
சோபிதா துலிபாலா - நாக சைதன்யா

நாக சைதன்யாவுக்கு குறுந்தொகையில் காதலைச் சொன்ன சோபிதா துலிபாலா : ‘’அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’’

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா குறுந்தொகைப் பாடலை பகிர்ந்து அசத்தியிருக்கிறார்.
Published on

தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் நடந்த அன்றே இதைப் பொதுவெளியில் நாகார்ஜுனா அறிவித்தார். 

இந்நிலையில், மணமக்களான நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும், இதுவரை அவர்களின் காதல் பயணத்தை பற்றி பெரிதாக எதுவும் பொதுவெளியில் பகிராமல் இருந்தனர். ஆனால், இன்று மாலை, சோபிதா துலிபாலா தனது காதலை, அனைவருக்கும் வெளிப்படுத்தும் விதமாக ஒரு ட்வீட்டுடன் நிச்சயதார்த்தப் படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சோபிதா துலிபாலா - நாக சைதன்யா
சோபிதா துலிபாலா - நாக சைதன்யா

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா குறுந்தொகைப் பாடலை பகிர்ந்து அசத்தியிருக்கிறார்.

‘’யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ் வழி அறிதும்?

செம் புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’’

ஏ.கே.ராமாஜுனத்தின் குறுந்தொகைப்பாடலின் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறார் சோபிதா துலிபாலா.

சோபிதா துலிபாலா - நாக சைதன்யா
சோபிதா துலிபாலா - நாக சைதன்யா
சோபிதா துலிபாலா - நாக சைதன்யா
சோபிதா துலிபாலா - நாக சைதன்யா

சோபிதாவின் குறுந்தொகைப் பாடல் தேர்வு நாக சைதன்யாவின் மீதான அவரது ஆழ்ந்த காதலின் பிரதிபலிப்பு. இந்த இனிய காதல் பயணம், இருவரின் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கட்டும்!

logo
News Tremor
newstremor.com