சினிமா
‘’எனக்கான மொழியில் தங்கலான் யார் என்பதை சொல்லியிருக்கிறேன்'’- பா.இரஞ்சித்!
இன்று பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்' திரைப்படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில் பா.இரஞ்சித் ‘தங்கலான்’ திரைப்படம் குறித்துப் பேசியிருக்கிறார்.
‘’கமர்ஷியல் படம், ஆர்ட் படம் என தமிழ் மக்கள் பிரித்துப் பார்த்ததில்லை. அவர்கள் நினைத்திருந்தால் பாலிட்டிக்ஸ் பேசியிருக்கான் என என்னை சைட்லைன் பண்ணியிருக்கலாம். ஆனால், தமிழ் பார்வையாளர்கள் அப்படி செய்யவில்லை. என்னுடைய கருத்தில் பார்வையாளர்களுக்கு முரண் இருக்கலாம். ஆனால், என்னுடைய திரைமொழி அவர்களுக்கு பிடித்திருந்தது. அதை ரசித்ததால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன்.
தங்கலான் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். புதிய முயற்சியாக இருக்கும், புதிய உணர்வைக் கொடுக்கும். புதிய வாழ்வையும் பார்வையாளர்கள் கண்டடைவார்கள் என நான் நம்புகிறேன்’’ எனப் பேசியிருக்கிறார் பா.இரஞ்சித்.
அவரது முழுமையான பேச்சை வீடியோவில் காணலாம்!