பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம்!

'லக்கிமேன்' இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் குமரன். வெள்ளித்திரையில் கதாநாயகனாக வேண்டும் என்று எடுத்து வந்த முயற்சியால் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்-2' சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். பின்பு, பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'வதந்தி' வெப்சீரிஸில் நடித்தார். இப்போது அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் பற்றி அறிவித்துள்ளார்.

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவான 'லக்கிமேன்' படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் முன்னாள் ரேடியோ ஜாக்கி என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் குமரனுடன் குமரவேல், ஜி.எம். குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார். ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும் மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது. திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

logo
News Tremor
newstremor.com