விமல்
விமல்

5 கோடி ரூபாய் கடன்... நடிகர் விமலுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நடிகர் விமல் படத் தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on

'பசங்க', 'வாகை சூட வா', களவாணி’, ‘கலகலப்பு’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விலங்கு’ வெப் சீரிஸ் பரவலான பாராட்டுகள் பெற்றது. கடந்த 2018-ம் ஆண்டு இவர் நடித்து, தயாரித்திருந்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் 5 கோடி ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக சொன்ன நடிகர் விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி.

ஆனால், கோபி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுத்தார் விமல். தயாரிப்பாளர் சங்கத்தில் விமல் மீது புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரச ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபாய் 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நடிகர் விமல் 3 கோடி ரூபாயை 18% வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com