சமந்தா - வருண் தவான்
சமந்தா - வருண் தவான்

‘’வருணுடன் ஆக்‌ஷனும் ரொமான்ஸ் மாதிரி இருந்தது!’’ - சமந்தா

ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது தனக்கு ரொமான்ஸ் செய்வது போல என நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.
Published on

ஆங்கிலத்தில் வெளியான ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக ‘சிட்டாடல்: ஹனிபனி’ உருவாகி இருக்கிறது. இதில் நடிகர்கள் சமந்தா மற்றும் வருண் தவான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’தி ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸ் புகழ் இயக்குநர்கள் ராஜ் & டி.கே இதை இயக்கியுள்ளனர். பிரைம் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தத் தொடரின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு சமந்தா அசத்தியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

சமந்தா - வருண் தவான்
சமந்தா - வருண் தவான்

இதன் டீசர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சமந்தா ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கும் வருணுக்கும் நல்ல புரிதல் இருந்தது. எப்படி ஆக்‌ஷன் செய்யலாம் என்று பேசினோம்.

எங்களுக்குள் இருந்த புரிதல் காரணமாக ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் ஒரு ரொமான்டிக் நடனம் போல அழகாக வந்தது. 12 நிமிட ஆக்‌ஷன் காட்சி ஒன்று வரும். அதில் கேமராமேன், இயக்குநர் என படப்பிடிப்புத் தளத்தில் இருந்த எல்லோருமே ஒரே நேர்க்கோட்டில் இருந்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதை இந்த அளவுக்கு என்ஜாய் செய்வேன் என்று நினைக்கவே இல்லை. வருணுடன் ஆக்‌ஷனும் ரொமான்ஸ் மாதிரி இருந்தது'' என்று பேசியுள்ளார் சமந்தா.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com