சினிமா
''வெறும் 6 லட்சம்... ‘அட்டக்கத்தி’ படத்தை ரிலீஸ் பண்ண பா.இரஞ்சித் பட்ட பாடு'' - சந்தோஷ் நாராயணன்!
இயகுநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘வாழை’ படத்தின் ‘’தென்கிழக்கு தேன்சிட்டு’’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
'வாழை' பாடல் வெளியிட்டு விழாவின்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இயக்குநர் பா.இரஞ்சித் குறித்தும் மாரி செல்வராஜின் வளர்ச்சி குறித்தும் பேசினார். ‘’ஒரு ஆஸ்பிட்டல்ல நின்னு நானும் இரஞ்சித்தும் ஒரு 6 லட்சம் இருந்தாபோதும் இந்த படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு 2011-ல பேசிட்டு இருந்தோம். அப்போ அது அவ்ளோ பெரிய பணம்… இப்ப ரஞ்சித், மாரி செல்வராஜோட வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழை படம் கட்டாயம் எல்லோரும் பார்க்கவேண்டிய படம்'’ எனக்குறிப்பிட்டார். அவர் பேசிய பேச்சின் முழு வீடியோவை இங்கே காணலாம்!