''பஞ்சாப் ரோட்லயே நாலு நாள் படுத்து தூங்கி, கயித்துல தொங்கி நடிச்சாரு கமல்'' - இயக்குநர் ஷங்கர்
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தியன் - 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசனை மிகவும் புகழ்ந்து பேசினார் இயக்குநர் ஷங்கர்.
''என்னுடைய எல்லா படங்களுமே இப்படி இருந்தா எப்படியிருக்கும்ன்ற கற்பனைதான். இந்தியன் தாத்தா இப்போ இருந்தா எப்படியிரும்கிற ஐடியாதான் 'இந்தியன் - 2'. 28 வருஷங்களுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் நடக்கும். 'இந்தியன் - 2' மற்ற மாநிலங்களுக்கும் பரவியிருக்கு. இந்தியாவில் உள்ள அத்தனைக் குடும்பங்களும் என்கேஜிங்கா பார்க்கக்கூடிய படமா இது இருக்கும்.
'இந்தியன்' ஷூட்டிங்ல 40 நாள் ப்ராஸ்தட்டிக் மேக்அப் போட்டாரு கமல் சார். இந்தமுறை 70 நாள் ப்ராஸ்தட்டிக் மேக்அப் போட்டிருக்கார். இந்த மேக்அப் போட்டதும் கமல் சார் பக்கத்துல இருக்கமாதிரி இருக்காது. ஷூட்டிங் ஸ்பாட்ல இந்தியன் தாத்தா சுத்திக்கிட்டே இருக்கமாதிரியே இருக்கும். ஒரு சீன் நாலு நாள் ரோட்லயே தூங்கி நடிச்சாரு கமல் சார். ப்ராஸ்தட்டிக் மேக்அப் போட்டுக்கிட்டு, கயித்துல தொங்கிக்கிட்டு, கையில எதையோ வரைஞ்சிக்கிட்டு ப்ஞசாபில பேசணும், நடிக்கணும். ஸ்லோமோஷன்ல எடுக்குறோம். அதுக்கு ஏத்தமாதிரி டயலாக் டெலிவரி இருக்கணும்னு ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்சாரு. என்ன சேலன்ஜிங்கான ரோல் கொடுத்தாலும் பண்ணிடுறாரு கமல் சார். எப்போ அவரைப்பார்த்தாலும் அதே பிரமிப்பு இருக்கு'' என்று பேசிய ஷங்கர் இசையமைப்பாளர் அனிருத்தையும் பாராட்டி பேசினார். ''ட்யூன் எப்படி... எவ்ளோ பர்சன்ட் ஓகேனு என்கிட்ட அனிருத் கேட்பாரு. 80 பர்சன்ட்டுன்னு நான் சொல்வேன். முடியாது நீங்க 100 பர்சென்ட் ஓகே ஆகணும்னு 100 பர்சென்ட் நான் திருப்தியாகுற வரைக்கும் ட்யூன்ஸ் போட்டுக் கொடுத்திருக்காரு'' என்று பேசினார் இயக்குநர் ஷங்கர்!