‘’நான் கமல்ஹாசனின் மாணவன், ரசிகன், சீடன்’’ - 'இந்தியன் - 2' ட்ரெய்லர் வெளியீட்டில் சித்தார்த்!

இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய சித்தார்த் கமல்ஹாசனுக்குத் மனப்பூர்வமான தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

‘’21 வருஷங்களுக்கு முன்பு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சார் ‘பாய்ஸ்’ படம் மூலம் சினிமால நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்போ 21 வருஷங்களுக்கு அப்புறம் கமல் சாரோட நடிக்கிற வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். இரண்டாவது வாய்ப்புக்காக ஷங்கர் சாருக்கு கூடுதல் நன்றி. அவர் கொடுத்த இந்த வாய்ப்பை அவ்ளோ ஈஸியா வீண் போகவிடமாட்டேன். ‘இந்தியன் -2’ படத்துல உழைப்பையும், காதலையும் சேர்த்திருக்கேன்.

எல்லா படங்கள் ரிலீஸாகும்போது பேட்டிகள்ல ‘இந்த கதாபாத்திரம் உங்க பர்சனல் கேரெக்டரோட எவ்ளோ சேர்ந்து போயிருக்கு, இல்ல முரணா இருக்கா’னு கேட்பாங்க. இந்தப்படத்துல நான் தைரியமா சொல்வேன் என்னோட பர்சனல் கேரெக்டர் இந்தப்படத்துல இருக்கு.

நான் சின்னவயசுல இருந்தே கமல்ஹாசன் ஸ்டூடண்ட். கம்லஹாசன் ரசிகன். கமல்ஹாசன் மாதிரி ஆகணும்னு சினிமாவுக்கு வந்தவன். நான் அவர்கூட நடிக்கிற முதல் படம் இதுதான். ஆனா, அவர் என்கூட என்னோட ஃபர்ஸ்ட் படத்துல இருந்து நடிச்சிட்டிருக்காரு. கூடவே இருந்து வழிகாண்பிச்சிட்டே வந்திருக்காரு. நான் கமல்ஹாசனோட சீடன். நீங்க இல்லைனா நான் நடிகனா இந்த மேடையில நிக்க முடியாது. கமல்ஹாசன் படத்தோட ட்ரெய்லர்ல என்னையும் பார்க்கவெச்சதுக்கு ஷங்கர் சாருக்கு ரொம்ப நன்றி. 

என் முன்னாடி கமல்ஹாசன் நடிச்சிட்டு இருக்காரு சார்னு ஓடிப்போய் ஷங்கர் சார்கிட்ட சொல்லுவேன். ‘யோவ் அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்… போயா போய் நடி'னு விரட்டி விடுவாரு. தாத்தா வர்றாரு… கதற விடப்போறாரு'’ என்று பேசினார் சித்தார்.

logo
News Tremor
newstremor.com