கமல்ஹாசனை கிண்டல் அடித்த ரஜினி ரசிகர்… ‘’அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை’’ என விமர்சித்த வினோதினி!
நேற்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. இன்னொருபக்கம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டு பேசினார். இந்தசூழலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய செயற்குழுக் கூட்ட செய்தியைப் பகிர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ‘’இந்த குரூப்புல டூப்பு வேற காமெடி பண்ணிக்கிட்டு'’ என கமென்ட் போட்டு கிண்டல் அடித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக நடிகையும், மக்கள் நீதி மய்யக் கட்சியைச் சேர்ந்தவருமான வினோதினி வைத்தியநாதன் ரஜினியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து எக்ஸ் தளத்தில் எழுதியிருக்கிறார்.
‘’ஆதித்தநாத் காலில் விழுந்ததில்லை… இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர்… ஈஷா யோகம் கண்டதில்லை… உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராளி சாவுகள் நாட்டைச் சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை… ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை… எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம்… ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை… ஐந்நூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை… ஒருநாளும் சரியான வருமானவரி கட்டாமலிருந்ததில்லை
So… ஓரமாகப் போய் அழவும், அஃது உத்தமம்’’ என பதில் எழுதியிருக்கும் வினோதினிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது!