சினிமா
ரஜினிக்காக சிறப்பு பூஜை செய்த மகள் செளந்தர்யா... அப்பல்லோவில் இருந்து நாளை டிஸ்சார்ஜ்?!
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை விரைவில் நலம் பெற வேண்டும் என மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார்.
நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செரிமானப் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனையில் இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதிநவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஸ்டன்ட்டும் வைக்கப்பட்டது என மருத்துவமனை தரப்பு அறிக்கை வெளியிட்டது.
ரஜினி தற்போது பூரண நலமுடன் இருப்பதாகவும், நாளை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது கணவர் விசாகனுடன் திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் ரஜினி பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.