‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறாரா இல்லையா?! உண்மை நிலவரம் என்ன?!
கலைப்புலி தாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘வாடிவாசல்'. சி.சு.செல்லப்பா எழுதியா ‘வாடிவாசல்' நாவலை அடிப்படையாகக்கொண்டு இந்தப்படத்தை எடுக்க இருப்பதாக 2021-ம் ஆண்டு அறிவித்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அறிவிப்பு போஸ்டரும், டீசரும் வெளியானதைத்தாண்டி படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. இந்த சூழலில் ‘வாடிவாசல்' நாவல்படி அப்பா- மகன் கதைதான் முக்கிய களம். இதில் சூர்யாவின் அப்பாவாக இயக்குநர் அமீரைத் தேர்வு செய்துவைத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முந்தைய ‘பருத்தி வீரன்' பிரச்சனைவெடித்து சூர்யா தரப்புக்கும், அமீர் தரப்புக்குமான சண்டை பெரிதானது. இதனால் ‘வாடிவாசல்' படம் கைவிடப்படுவதாகவும், சூர்யா இதில் நடிக்கமாட்டார் எனவும் பேச்சுகள் கிளம்பியது.
இதுகுறித்து படத்தயாரிப்பு குழுவிடமே கேட்டோம். ‘’வாடிவாசல் படத்தில் சூர்யாதான் நடிக்கிறார். இன்னும் சில வாரங்களில் படத்துக்கான மியூசிக் ரெகார்டிங்கை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தொடங்குகிறார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது’’ என்றார்கள்.
எனவே சூர்யா, வெற்றிமாறன் ரசிகர்கள் ‘வாடிவாசல்' வருகைக்காக காத்திருக்கலாம்!