காதலை மீட்டெடுக்கும் வனிதா - ராபர்ட் : அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள்
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும் வனிதா விஜயகுமார் நிச்சயமாக ஒரு திறமைசாலி தான். தன்னை நோக்கி வந்த விமர்சனங்கள், இழி சொற்கள், பல திருமணங்கள் செய்தவர் என்னும் பட்டம் உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். தன் படப் ப்ரோமோஷனுக்கு அவரின் கல்யாண கான்செப்ட்டையே பயன்படுத்தி கொண்டார். சாதாரணமாக ஒரு படத்தின் போஸ்டரை வனிதா வெளியிட்டிருந்தால் இந்தளவுக்கு ஹிட் ஆகியிருக்குமா என்பது சந்தேகம் தான்.
வனிதாவின் முன்னாள் காதலர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து save the date என்று பதிவிட்டது தான் மிச்சம். அனைத்து மீடியாக்களும் அந்த போஸ்டரை பகிர்ந்து `free’ ப்ரோமோஷன் செய்து கொடுத்துவிட்டனர்.
அதுமட்டுமா நேற்று முன்தினம் வெளியான பட அறிவிப்பு வீடியோவை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துவிட்டனர். யூ டியூப் ட்ரெண்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளது. இப்போது சொல்லுங்கள் வனிதா திறமைசாலி தான் அல்லவா?
வனிதா அக்டோபர் 4-ம் தேதி தன் 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் ராபர்ட் குடும்பமும் கலந்து கொண்டது. வனிதாவின் திரைத்துறை நண்பர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் வைத்து வனிதா ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது தான் தன் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
வனிதா விஜயகுமார்- ராபர்ட் இணைந்து நடிக்கும் "மிஸஸ் & மிஸ்டர்" படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் ஒரு போட்டோ பதிவிட்ட போது, அனைவரும் அவர்களுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்று விமர்சித்தனர்.
இதற்கு முன்னர் வனிதா-ராபர்ட் நடித்த திரைப்படம் அந்தளவுக்கு ஹிட் ஆகவில்லை. அவர்களுக்குள் காதல் இருந்து, பின்னர் பிரேக் அப் செய்தனர். ஆனால் அந்த சமயத்தில் இருவரும் இது திருமண ப்ரோமோஷன் என்று சொல்லி மழுப்பினர். தற்போது பல வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர். படத்தின் கதை மற்றும் இயக்கம் வனிதா. படத்தின் தயாரிப்பாளர் ஜோவிகா. அதாவது அவரது மூத்த மகள். ஆக மொத்தம் படத்திற்கு ஆல் இன் ஆல் வனிதா தான்.
மேலும், இம்முறை ஒரு யூ டியூப் சேனலில் வழக்கமாக வனிதா செய்யும் பிக் பாஸ் ரிவ்யூ ஷோவில் ராபர்ட்டும் சேர்ந்து பேசப் போகிறார். அதற்கான ப்ரோமோவும் வெளிவந்துள்ளது.
இதனிடையே வனிதா-ராபர்ட் ஒரு யூ டியூப் சேனலுக்கு ஒரு வருடத்திற்கு முன் அளித்த பேட்டியும் வைரல் ஆகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் வனிதாவும் ராபர்ட்டும் சேர்ந்து சமைத்து கொண்டே உரையாடுகின்றனர். அவர்கள் இருவரும் பழைய காதலின் நினைவுகளை மீட்டெடுத்து உரையாடினர்.
வனிதா-ராபர்ட் காதலித்த சமயத்தில் ராபர்ட் மாஸ்டர் தன் கையில் வனிதா பெயரை பச்சைக் குத்தி கொண்டார். அதுபற்றி வனிதா இந்த உரையாடலில் கேட்டபோது, ராபர்ட் வெளிப்படையாக, ``ஆமா நான் வனிதான்னு பச்சை குத்தி இருந்தேன், ஆனா பிரேக் அப் ஆகி வேற பொண்ண லவ் பண்ணப்போ அந்த பேர அழிச்சிட்டேன். இப்ப அந்த காதலும் பிரேக் அப் ஆகிருச்சு” என்றார்.
வனிதா ராபர்ட் மீது இன்னமும் பாசம் இருப்பதாக சொன்னார். ராபர்ட்டும் என் வாழ்க்கையில் இருந்த இரண்டு பெண்கள் நீயும் என் முதல் மனைவியும் தான். உன்னை மறக்க முடியாது என்றார். போகிற போக்கை பார்த்தால் படம் வெளியாவதற்குள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துவிடுவார்கள் போல என்கிற விமர்சனம் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டது.