விஜய்யின் GOAT பட ப்ரமோஷன்களை கேன்சல் செய்த வெங்கட் பிரபு… காரணம் என்ன?!
விஜய் நடிப்பில் செப்டம்பர் 5-ம் தேதி அதாவது அடுத்தவாரம் இதே நாளில் GOAT படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளும் ஒருபக்கம் தொடங்கி நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர் சந்திப்பு உள்பட பல்வேறு ப்ரமோஷன் நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது.
என்ன காரணம்?!
GOAT படம் 5-ம் தேதி ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் படம் மீண்டும் ரீசென்சார் செய்யப்பட்டு சென்சார் சான்றிதழ் தரப்பட்டது. இதற்கிடையே படத்தின் ஃபைனல் எடிட் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் வெங்கட் பிரபுவை தயாரிப்பாளர் தரப்பு பணிகளை முடித்துக்கொடுக்கச்சொல்ல, அதனால் ப்ரோமோஷன் பணிகளுக்கு ஒரு பிரேக் விட்டுவிட்டு படத்தை முடித்துத்தரும் வேலைகளில் இறங்கிவிட்டார் வெங்கட் பிரபு!
‘’படம் 3 மணி நேரம் நீடித்தாலும் GOAT படம் சர்ப்ரைஸ்களால் நிறைந்திருப்பதால் ஆடியன்ஸ் கவனம் விலகாது, போர் அடிக்காது’’ என வெங்கட் பிரபு, நடிகர் விஜய் உள்பட அனைவரிடமும் உறுதியளித்திருப்பதால்தான் தயாரிப்பு தரப்பு படத்தின் நீளத்தைக் குறைக்கவில்லை என்கிறார்கள்.
வெங்கட் பிரபுவின் கணிப்பு பலிக்குமா? ரசிகர்களின் ஆதரவை வெல்லுமா GOAT? செப்டம்பர் 5ம் தேதி, திரையரங்குகள் பதில் தரும்.