விஜய்யின் GOAT படத்தின் நீளம் 3 மணி நேரம்… தேசத்தந்தை வார்த்தைக்குத் தடைபோட்ட சென்சார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் மீண்டும் ரீ சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்த நிலையில் கழுத்தை அறுக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தை நீக்கச் சொல்லியிருந்தது சென்சார். தற்போது மீண்டும் ரீ சென்சார் செய்கையில் அந்தக் காட்சி வேறு வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்ததால் அந்த நீக்கத்தை ரத்து செய்திருக்கிறது.
அதேசமயம் படத்தில் இடம்பெற்றிருந்த தேசத்தந்தை என்கிற வார்த்தையை மியூட் செய்திருக்கும் சென்சார் குழு, அதேப்போல் கெட்ட வார்த்தைகள் அனைத்தும் மியூட் செய்யப்பட்டிருக்கின்றன. படத்தின் இறுதியில் 3 நிமிடத்துக்கு ப்ளூப்பர்ஸ் அதாவது ஷூட்டிங்கின்போது நடந்த ரகளைகளை ஷூட் செய்து வெளியிடுகிறார்கள்.
இதற்கிடையே படத்தின் நீளம் 3 மணி நேரம் இருப்பதால், விஜயு ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘இந்தியன் -2’ படமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களால் பின்னர் குறைக்கப்பட்டது. இரண்டரை மணி நேரத்துக்கு மேலான படங்களில் பார்வையாளர்கள் சுவாரஸ்யம் குறைவானால் பொறுமையை இழக்கலாம் என்பதால் GOAT படம் எப்படியிருக்கும் என்கிற கருத்து மோதல்கள் இப்போதே சமூக வலைதளங்களில் உலவ ஆரம்பித்திருக்கிறது!