‘’விஜய்யின் ‘GOAT’ படத்தை எப்படி ஆரம்பிச்சோம், எப்படி முடிச்சோம்னே தெரியல'’ - வெங்கட் பிரபு!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘GOAT’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் இன்று இரவு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு எல்லோருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

‘’இது ஒரு மறக்கமுடியாத பயணம்… எப்படி ஆரம்பிச்சது எப்படி முடிஞ்சதுனு தெரியல… இந்த கதையை முதல்ல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திகிட்டதான் சொன்னேன். அப்புறம்தான் விஜய் சார் அப்பாயின்மென்ட் கிடைச்சது. அங்கே போய் சொன்னேன். அவர் ஓகே சொன்னவுடனே படத்தை ஆரம்பிச்சிட்டோம். இப்படி ஒரு ஹீரோ, இப்படி ஒரு ப்ரொடக்‌ஷன் நிறுவனம் இருக்கும்போது பட்ஜெட் பிரச்சனையே இல்லை… வெறும் லொக்கேஷன் பார்க்கவே இஸ்தான்புல் போனோம். அப்புறம்தான் ரஷ்யால ஷூட் பண்ணோம். நாங்க ரஷ்யால ஷூட் பண்ணும்போது அவ்ளோ பிரச்சனைகள் நடந்துட்டு இருந்துச்சு. 

படத்தின் முதல் நாள் ஷூட்டை ஆரம்பிச்சதே அமெரிக்கா எல்லையிலதான்.‘GOAT’ படத்துக்காக  லோலான்னு உலகின் மிகப்பெரிய VFX நிறுவனத்தோட வொர்க் பண்ணியிருக்கோம். படத்துல திலீப் சுப்பராயன் மாஸ்டர் செகண்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வொர்க் பண்ணார். ஏன்னா, அவ்ளோ ஸ்டன்ட்ஸ் படத்துல இருக்கு. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்… விஜய் சாரை எப்படி பார்க்கணும்னு அவரோட ரசிகர்கள் ஆசைப்படுவாங்களோ அப்படிப்பட்ட படமா இது இருக்கும்'’ என்றார் வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபுவின் முழு பேச்சை வீடியோவில் காணலாம்!

logo
News Tremor
newstremor.com