நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னவெல்லாம் சாப்பிடலாம்?!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னவெல்லாம் சாப்பிடலாம்?!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்துவது முக்கியம். இயற்கையான முறைகளில் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தக்கூடிய பல உணவுகள் இருக்கின்றன. இயற்கை உணவுகள் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இவற்றை உட்கொள்ளலாம்!

1. திராட்சை பழம்

திராட்சை பழம்
திராட்சை பழம்

திராட்சை பழத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் உள்ள நச்சு பொருட்களை நீக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

2. பூண்டு

பூண்டு
பூண்டு

பூண்டு ஒரு இயற்கை ஆன்டிபயாட்டிக். இதில் உள்ள அலிசின் நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, உடலை நோய்களை எதிர்கொள்ள வைக்கிறது.

3. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்த உதவுகிறது. அசிடிட்டி பிரச்ச்னை இல்லாதவர்கள் தினசரி காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது உடலுக்கு நல்லது.

4. ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழம்
ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் C இருக்கிறது. இது உடலில் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறனை அதிகரிக்கிறது.

5. பாகற்காய்

பாகற்காயில் அதிக அளவு வைட்டமின் A மற்றும் C உள்ளது. இது நமது நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. பாகற்காய் சாறு குடிப்பது நோய் எதிர்ப்புக்கு உதவும்.

6. காய்கறி, தானியங்கள்!

காய்கறி, தானியங்கள்!
காய்கறி, தானியங்கள்!

பூசணிக்காய், கீரை, சிறு தானியங்கள் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு புற்றுநோய் எதிர்ப்பு நச்சுக்கள் மற்றும் பல வைட்டமின்கள் கிடைக்கும். இது நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த உதவும்.

7. போதுமான தண்ணீர்!

நமது உடல் அடிக்கடி நீர் இழப்பை சந்திக்கிறது. போதுமான அளவில் தண்ணீர் அருந்துவதால், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, நோய் எதிர்ப்புத் திறனை உயர்த்த முடியும்.

8. சுரைக்காய் ஜூஸ்

இயற்கையான சுரைக்காய் ஜூஸ் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com