உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
நிதானத்துடன் செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் சாதகமாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதிநிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
மந்தமான நாளாக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
பொறுப்புக்கள் அதிகரிக்கும். சௌகரியத்தை இழந்து செயல்பட வேண்டி இருக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
சுமுகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு மேம்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
சாதகமான சூழல் இல்லாமல் போகலாம். எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுத்துங்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். அனுசரித்து நடப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
முயற்றி செய்தால் வெற்றிகரமான நாளாக மாறும். சவால்களை புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் சமாளிக்கலாம். வேலையில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு மறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கும் செலவுக்கும் சம வாய்ப்பு உள்ளது.
மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் ஆர்வம் குறையும். இதனால் வேலையை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். கணவன் மனைவி இடையே மனவருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படும்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். நண்பர்களால் நன்மை வந்து சேரலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலமான பலன் கிடைக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
கடினமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் சாதகமான நாளாக மாறும். வேலையில் அலைச்சல் இருக்கும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. நிதி தொடர்பான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மந்தமான நாளாக இருக்கும். கவனச்சிதறல் காரணமாக பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். எச்சரிக்கையுடன் நடப்பது பிரச்னைகளை தவிர்க்க உதவும். குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.