ஜார்ஜியா துப்பாக்கிச்சூடு
ஜார்ஜியா துப்பாக்கிச்சூடு

கிறிஸ்துமஸ் பரிசாக தந்தை வாங்கித் தந்த துப்பாக்கி...ஆசிரியர்கள், சக மாணவர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்!

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமெரிக்கா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 
Published on

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அப்பலாஜி(Apalachee) என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் - 4) பள்ளிக்குள் ஒரு அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகின. உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு 14 வயது மாணவர்களும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். 

FBI நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன. ஜார்ஜியாவில் புதிய கல்வி ஆண்டு தொடங்கி சில நாள்களே ஆகிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கோல்ட் கிரே(Colt gray) எனும் அந்த 14 வயது மாணவர் விண்டர் நகரில் உள்ள அபலாச்சி பள்ளியில் படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை சக மாணவர்கள் மீது  அவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 

கடந்தாண்டு ஆண்டு 2023, கிரே துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒரு வழக்கில் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.  பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாக இணையம் வழி மிரட்டல் விடுத்ததற்காக கிரேவை அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னர் மிரட்டல் விடுத்த கிரே அதனை உண்மையில் நிகழ்த்திவிட்டதாக FBI அதிகாரிகள் கூறுகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும்  அந்த மாணவரை தற்போது அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரது தந்தை காலின் கிரேவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

america gun shot
Pixabay

பரிசாக கிடைத்த துப்பாக்கி!


கோல்ட் கிரேவின் தந்தை 54 வயதான கொலின் கிரே. "தெரிந்தே தனது மகன் கொலை ஆயுதத்தை வைத்திருக்க அனுமதித்திருக்கிறார். 54 வயதான கொலின் கிரே இந்தக் கொலைகளுக்கு ஒரு மறைமுக காரணமாக இருந்தார்'' என நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கிரே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு  தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். கோல்ட் கிரேவின் தாயையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன் தனது தயார் தன்னையும், தன்னுடைய சகோதரியையும் மிக மோசமாக நடத்தியதாகவும், பல நாட்கள் உணவு தராமல் சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 2023-ம் ஆண்டு கொலின் தனது மகனுக்கு விடுமுறை பரிசாக துப்பாக்கியை வாங்கிக் கொடுத்ததாக அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்த துப்பாக்கியை உள்ளூர் துப்பாக்கி கடையில் கிறிஸ்துமஸ் பரிசாக வாங்கியுள்ளார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி புதன்கிழமை காலை 10.20 மணி அளவில் துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததாக புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Pixabay

சம்பவம் நடந்தபோது பள்ளியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை எதிர்கொண்டு உடனடியாக மடக்கிப் பிடித்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவர் சரணடைந்தார் என்றும் கூறப்பட்டுகிறது.

தாக்குதலுக்கான நோக்கத்தை அவர் விசாரணையில் கூறினாரா என்பது குறித்து தகவல் இல்லை. அவர் பயன்படுத்திய துப்பாக்கி எந்த வகையைச் சேர்ந்தது என்பதையும் அதிகாரிகள் கூறவில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச் சூடுகளை அமெரிக்கா கண்டுள்ளது. இது அமெரிக்காவில் துப்பாக்கிச் சட்டங்கள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com