விஜய்
விஜய்

‘’நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்… ஆனால், எய்ம்ஸ், ஜிப்மருக்கு ஓகே’’ - புரியாமல் பேசுகிறாரா விஜய்?

''நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரம் இதை சால்வ் பண்ணணும்.''
Published on

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று இரண்டாம் கட்டமாக 10, 12-ம் வகுப்புத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிவருகிறார்.

ஏற்கெனவே கடந்தவாரம் நடந்த நிகழ்வில் விஜய் பேசும்போது அடுத்த விழாவில் பேசமாட்டேன் என அறிவித்திருந்தார். ஆனால், போதைப்பொருளை பற்றி பேசிய விஜய் நீட் பற்றி பேசாததற்கு விமர்சனங்கள் எழுந்ததால் இன்று நீட் குறித்து மட்டும் பேசினார்.

விஜய்
விஜய்

மேடையில் அவர் பேசும்போது ‘’கிராமப்புற மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் என எல்லா மாணவர்களுமே நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.

நீட் குறித்து மூன்று விஷயங்களைப் பகிர்ந்துக்க விரும்புறேன். முதல்ல இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. 1975-க்கு முன்புவரை கல்வி மாநிலப் பட்டியல்லதான் இருந்துச்சு. ஒன்றிய அரசு வந்தப்பிறகுதான் பொதுப் பட்டியலுக்கு மாறிடுச்சு. இரண்டாவது ஒரே நாடு, பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதே  கல்விக் கற்கும் நோக்குத்துக்கு எதிரான விஷயமா நான் பார்க்குறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏத்தமாதிரி பாடத்திட்டங்கள் இருக்கணும். இது மநில உரிமைக்காக மட்டுமே கேக்கலை. கல்வி முறைல பல்வேறு பார்வைகள், பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பர்ஸ்பெக்டிவ் இருக்கணும். பன்முகத்தன்மை பலமே தவிர வீக்னஸ் இல்லை. ஸ்டேட் சிலபஸ்ல படிச்சிட்டு என்சிஇஆர்டி சிலபஸ்ல தேர்வு வெச்சா எப்படி… இது கிராமப்புற மாணவர்களுக்கு எவ்ளோ கடினமான விஷயம்.

விஜய்
விஜய்

மூணாவது நீட் தேர்வுல குளறுபடி. இதுக்கு அப்புறம் நீட் தேர்வு மேல இருந்த நம்பகத்தன்மையே போயிடுச்சு. நீட் தேர்வே தேவையில்லை என்கிற எண்ணம் மக்கள்கிட்ட வந்துடுச்சு. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரம் இதை சால்வ் பண்ணணும். இதுக்கு நிரந்தர தீர்வுதான் என்னென்னா கல்வியை பொதுப்பட்டியல்ல இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரணும். இதுல சட்ட சிக்கல்கள் எதாவது இருந்துச்சுன்னா சிறப்பு பொதுப்பட்டியல் கொண்டுவந்து அதுல கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்கணும். இதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்’’ என்றவர் அடுத்து பேசியதுதான் சர்ச்சையாக விவாதிக்கப்படுகிறது.

‘’நீட் தேர்வு வேணும்னா மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர் மாதிரி நிறுவனங்களுக்கு மட்டும் நடத்திக்கலாம். இது என்னுடைய ஆலோசனைதாங்க். இது நடக்குமான்னு எனக்குத் தெரியாது. அப்படியே நடந்தாலும் நடத்தவிடமாட்டாங்கனும் எனக்குத் தெரியும்'’ என்று விஜய் பேசினார். 

ஆனால், அரசியல் விமர்சகர்களோ ‘’நீட்டை அடியோடு ஒழிக்கவேண்டும் என்பதுதான் கருத்தாக இருக்கவேண்டுமே தவிர, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டும் என்றால் நீட்டை வைத்துக்கொள்ளலாம் என்பது சரியான வாதமாக இருக்காது. அப்படி நடந்தால் மத்திய அரசு நிறுவனங்களில் படிக்கும் படிப்பைத்தான் உயர்வாக கருதி அதற்குத்தான் முக்கியத்துவம் கிடைக்குமே தவிர மாநில அரசின் வழியே படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் இருந்து அனைத்திலும் முன்னுரிமை கிடைக்காது. இது பாகுபாட்டிற்கும், ஏற்றத்தாழ்வுக்கும்தான் வழிவகுக்கும்’’ என்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com