எம்.ஆர்.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது... 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கு!

40 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் இன்று கேரளாவில் கைது செய்துள்ளனர்.
Published on

கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி சான்றிதழ்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட அது தொடர்பான விசாரணை நடந்துவந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட, அவரைக் கைது செய்ய போலீஸ் முயன்றபோது தலைமறைவாகி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி வழக்குத்தொடர்ந்தார் விஜயபாஸ்கர். கோர்ட் முன்ஜாமினை மறுக்க, தலைமறைவான முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கரை தேடிவந்தது தனிப்படை போலீஸ்.

கிட்டதட்ட 40 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் வைத்து கைது செய்திருக்கிறது தமிழக சிபிசிஐடி போலீஸ்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com