ஆர்ம்ஸ்ட்ராங் கொலை: வேவு பார்த்த ஆட்டோ டிரைவர்…ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் நாள் குறித்த பொன்னை பாலு!
சென்னை பெரம்பூரில் நேற்று மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொலையாளிகள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்க அவரது பிறந்தநாளில் ஆர்ம்ஸ்ட்ராங்கைக் கொன்றதாக அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஆஜராகியிருக்கும் பொன்னை பாலு வாக்குமூலம் அளித்திருக்கிறான்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பாலு, தான் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆட்கள் மூலம் கொலை செய்யப்படலாம் என்கிற அச்சம் இருந்ததாகவும், அதோடு அண்ணனின் கொலைக்குபபழிவாங்க அவரது பிறந்ததாளை, ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறந்தநாளாக மாற்றுவதற்காக திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான். ஆர்ம்ஸ்ட்ராங்கை கொல்ல கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து ஸ்கெட்ச் போட்டதாக போலீஸில் வாக்குமூலம் அளித்திருக்கிறான் பாலு.
இதற்கிடையே பெரம்பூரைச் சேர்ந்த திருமலை எனும் ஆட்டோ டிரைவர்தான் பொன்னை பாலுவுக்கு இந்தக் கொலையில் முழு உடைந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர் போல தினமும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு எதிரே நின்று வேவு பார்த்து, ஆர்ம்ஸ்ட்ராங்கைக் கொல்ல எந்த நேரம் சரியாக, எந்த வழியாக வரவேண்டும், எந்த வழியாக வெளியேற வேண்டும் என முழு ஸ்கெட்ச்சையும் போட்டது திருமலைதான் என்கிற விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.