ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் செல்வப்பெருந்தகை
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் செல்வப்பெருந்தகை

''ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு'' - பகுஜன் சமாஜ் பகீர் குற்றச்சாட்டு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் BSP-யின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருக்கிறது சென்னை மாநகர போலீஸ். இந்த கொலைக் குற்றத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பிருப்பதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் செல்வப்பெருந்தகை மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

‘’ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது; செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வப்பெருந்தகையை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவரை நீக்கினால்தான் மக்கள் மத்தியில் காங்கிரசின் மதிப்பு நிலைத்திருக்கும்’’ என்று ஜெய்சங்கர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுபவருமான அஸ்வத்தாமன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. போலீஸ் விசாரணையில் செல்வப்பெருந்தகையின் பெயரை அஸ்வத்தாமன் சொன்னதாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு இருப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆனந்த் உள்பட பலரும் மறைமுகமாகப் பேசிவந்தனர். இந்நிலையில்தான் ஜெய்சங்கர் நேரடியாகக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செல்வப்பெருந்தகை எந்த பதிலும் அளிக்கவில்லை!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com