ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் கொலை : 'மொட்டை' கிருஷ்ணன் தொடர்ப்பு... மோனிஷா நெல்சன் மறுப்பு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி, தேடப்படும் குற்றவாளி மொட்டை கிருஷ்ணனுக்கு 75 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் மோனிஷா நெல்சன்.
Published on

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் கூட்டாளி வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீஸார் தொடர்ந்து தேடிவருகின்றனர். அவர் குடும்பத்தோடு தாய்லாந்துக்கு பறந்துவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் அவருடன் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதுதொடர்பாக மோனிஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் நேற்று காலை போலீஸ் விசாரணைக்கு ஆஜரானர்.

இந்த விசாரணைக்குப்பிறகு மோனிஷா நெல்சனுக்கும் - மொட்டை கிருஷ்ணனுக்கும் இடையேயான நட்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. இதற்கிடையே வழக்கறிஞர் கிருஷ்ணனுக்கு 75 லட்சம் ரூபாய் பணத்தை மோனிஷா அனுப்பியதாக செய்திகள் பரவின. இந்த செய்தி தொடர்பாக மோனிஷா நெல்சன் தனது வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

மோனிஷா நெல்சன்
மோனிஷா நெல்சன்

''திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா நெல்சனுக்கு எதிராகப் பல இணையதளங்கள் மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற செய்திகளைக் குறிப்பிடும் வகையில் செய்திகள் மற்றும் நேர்காணல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 7-ம் தேதியன்று வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி போலீஸார் சம்மன் அனுப்பி காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். மோனிஷா இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரிடம் தெளிவுபடுத்தினார். முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் மோனிஷா வழக்கறிஞர் கிருஷ்ணனுக்கு பணப் பரிவர்த்தனைகள் செய்து இருந்தார் என இன்று செய்திகள் வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த செய்திக்கு முற்றிலும் அவர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது'' என மோனிஷாவின் வழக்கறிஞர் பொது விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com