மெரினாவில் போலீசை மிரட்டிய சந்திரமோகன் ஜோடிக்கு ஜாமீன்!

மெரினாவில் போலீசை மிரட்டிய சந்திரமோகன் ஜோடிக்கு ஜாமீன்!

எவ்வளவு நாளைக்கு சிறையில் வைத்திருக்கப் போகின்றீர்கள் என்று கேள்வி!
Published on

சென்னை மெரினா கடற்கரையில் அநாகரீகமாக நடந்துகொண்டு போலீசை மிரட்டிய சந்திர மோகன், தனலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுக்கும்படி போலீசார் கூறினர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் இருந்த சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் போலீசாருடன் அநாகரீகமாக நடந்து கொண்டனர். துணை முதலமைச்சரைத் தெரியும் என்று அவர்கள் கூறி அவர்கள் செய்த தகராறு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். சமீபத்தில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா விசாரித்தார். அப்போது சந்திரமோகன் மற்றும் அவரது தோழி போலீசாரிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்தது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "அதற்காக எத்தனை நாட்கள் இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து வைக்கப் போகின்றீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், சந்திர மோகன் தினமும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com