மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அத்வானி!
பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த வாரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறிய நிலையில் அவர் வீட்டுக்குத் திரும்பினார். உடல் நலத்துடன் அவர் உள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆறு நாட்களில் நேற்று (ஜூலை 3, 2024) இரவு 9 மணி அளவில் அவர் உடல்நிலை பாதிக்கப்படவே டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் மருத்துவர் டாக்டர் வினித் சூரியின் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
96 வயதான அத்வானிக்கு வயோதிகம் காரணமாக பல்வேறு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயோதிகர்களுக்கான சிறப்பு மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரானதால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீட்டுக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே மீண்டும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.