Lagoon in indomesia
Lagoon in indomesiaPixabay

குறைந்த விலையில் வெளிநாட்டு சுற்றுலா... அழகான நாடுகளின் பட்டியல் இதோ!

சிறிய பட்ஜெட்டுக்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவரா நீங்கள், இந்த கட்டுரை உங்களுக்காக தான்.
Published on

இந்தியாவுக்குள் அதுவும் பக்கத்து மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றால் கூட பல ஆயிரங்களை செலவழிக்கிறோம். சுற்றுலா பயணம் முடிந்து வீடு திரும்பியதும், செலவீனங்களை கணக்கிட்டு பார்த்த பிறகுதான் பலருக்கு இவ்வளவு செலவாகிருச்சா... இதுக்கு வெளிநாட்டுக்கே போயிருக்கலாமே?” என்றெல்லாம் தோன்றும்! 

தெளிவான திட்டமிடலும், முன்பே விமான டிக்கெட்டை பதிவு செய்வதாலும், குறைந்த செலவில், மன நிறைவுடன் சில வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் சென்று வர முடியும். குறிப்பாக சில ஆசிய நாடுகள் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து விதத்திலும் அற்புதமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

Cheapest trip plan
Travel Pexels

மேலும் இந்திய ரூபாய் மதிப்பை விட குறைந்த பண மதிப்பை பெற்றுள்ள அழகான நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது நமக்கு பல மடங்கு செலவு குறையும், அதே சமயம் புதிய கலாச்சாரத்தை, மரபை அனுபவிக்கலாம்.   

குறைந்த செலவில் இந்தியாவில் இருந்து பயணம் செய்ய ஏதுவான நாடுகள்

1. இந்தோனேசியா

இந்திய ரூபாய் மதிப்பில் 1 Rupee = 185 Indonesian rupiah

இந்தோனேசியா குடியரசு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள ஒரு நாடு. இது 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான, மாறுபட்ட கலாச்சாரத்தை வழங்குகின்றன. 

Bali, Indonesia
Bali, Indonesia Pexels

இந்தோனேசியாவில் உள்ள அழகிய கடற்கரைகள், மத மற்றும் வரலாற்று தளங்களை கண்டுக்களிக்கலாம். 

பயணச் செலவு : சென்னை முதல் ஜகார்த்தா செல்ல 20 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை செலவாகும். 

தங்குமிட செலவு (ஒரு நாளைக்கு): 3,000 ரூபாய் முதலே ஹோட்டல் அறைகள் கிடைக்கும்.

உணவுக்கான செலவு ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு 1,100 ரூபாய் வரை செலவாகலாம். 

2. தாய்லாந்து

சமீப காலமாக இந்தியர்களின் மிகவும் விருப்பமான சுற்றுலா தேர்வாக தாய்லாந்து மாறி வருகிறது. தாய்லாந்தின் கரன்சி (தாய் பாட்)  இந்திய ரூபாயை விட சற்று அதிக மதிப்பை கொண்டது. மேலும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது தாய்லாந்தில் ஹோட்டல் அறைகள் கொஞ்சம் விலையுயர்ந்தது. 

Thailand
Blue and Beige Pagoda Tower Beside Forest, ThailandPexels

பயணச் செலவு (சென்னையிலிருந்து பாங்காக்): ஒருவருக்கு 15,000 முதல் ஆரம்பம். 

தங்குமிட செலவு (ஒரு நாளைக்கு): 4,000 ரூபாய் முதல் ஹோட்டல் அறைகள் கிடைக்கும்

உணவுக்கான செலவு (ஒரு நாளைக்கு): 1,100 ரூபாய்

3. இலங்கை 

இந்திய ரூபாய் 100 Rupees = 354 sri lankan rupees 

இந்தியாவுக்கு தெற்கில் உள்ள நமது அண்டை நாடான இலங்கை, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த சுற்றுலா தளமாக மாறி வருகிறது.

இந்தியப் பயணிகளுக்கான மத வழிபாட்டுத் தலமாகவும், இந்தியாவிலிருந்து பயணம் செய்ய மலிவான நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை உள்ளது.

travel
SrilankaPixabay

இலங்கையின் தமிழ் மற்றும் பௌத்த மரபுகள்,  அமைதியான கடற்கரைகள், மடாலயங்கள் மன அமைதியை கொடுக்கும்.

சென்னையில் இருந்து கொழும்பு செல்ல விமான டிக்கெட்டுகள் 13,000 ரூபாய் முதல் கிடைக்கும்.

4. கம்போடியா 

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் நிறைந்தது. 

Cambodia
Monument in CambodiaPixabay

இங்கு பல முக்கிய தொல்பொருள் மற்றும் வரலாற்று ஸ்தலங்கள் உள்ளன. வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாக இருக்கும்!

இந்திய ரூபாய் 100 Rupees ; 4860 Cambodian riel 

5. லாவோஸ்

லாவோஸ் ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும், இது மீகாங் ஆற்றின் வழியாக பயணிக்கிறது. மலை நிலப்பரப்பு, பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, மலை பழங்குடி குடியிருப்புகள், புத்த மடாலயங்களுக்கு பெயர் பெற்றது. 

லாவோஸ்
லாவோஸ் கலாச்சாரம் Pixabay

லாவோஸ் கலாச்சாரம் ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்ட சூழலை கொடுக்கும். 

இந்திய ரூபாய் 100 Rupees = 26297 Lao Kip

மீதமுள்ள மலிவு சுற்றுலா பயண நாடுகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com