Join the CMRL Sponsored PG Diploma in Metro Rail Technology & Management at IIT Madras. Get a monthly stipend of Rs. 30,000
சென்னை மெட்ரோ

சென்னை IIT-யில் PG டிப்ளமோ… மாணவர்களுக்கு மாதம் 30,000 நிதி வழங்கும் சென்னை மெட்ரோ ரயில்!

கேள்விகளுக்கு, CMRL-ஐ 044-24378000 என்ற எண்ணில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் அல்லது hr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
Published on

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  புதிய பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்காக இந்திய தொழில்நுட்பக் கழகம்-மெட்ராஸ் (IIT-M) உடன் இணைந்து 'மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை' (PGDMRTM) இல் ஒரு வருட முதுகலை பட்டயப் படிப்புக்கு நிதியுதவி செய்கிறது.

புதிதாக BE அல்லது B.Tech முடித்த பட்டதாரிகள், careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் ஜூன் 29-க்கு முன் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முழுநேர ஆண்டு படிப்பின் போது மாதம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.  படிப்பை முடித்தவுடன் மாதத்துக்கு 62,000 ரூபாய் சம்பளத்துடன் உதவி மேலாளராக CMRL-ல் நேரடியாகப் பணியமர்த்தப்படுவார்கள்.

Join the CMRL Sponsored PG Diploma in Metro Rail Technology & Management at IIT Madras. Get a monthly stipend of Rs. 30,000.
சென்னை மெட்ரோ

இந்த படிப்பில் சமீபத்தில் இளங்கலை பொறியியல் (BE)/தொழில்நுட்ப இளங்கலை (B.Tech) முடித்தவர்கள் சிவில் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ECE) அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE) அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 70 சதவிகிம் பெற்றவர்களும், பட்டதாரி திறன் தேர்வில் (GATE) தேர்ச்சிப்பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஒட்டுமொத்தமாக, அனைத்து பொறியியல் துறைகளுக்கும் 18 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சிவில் மூன்று இடங்கள், ECE க்கு ஐந்து, EEE க்கு ஆறு மற்றும் மெக்கானிக்களுக்கு நான்கு இடங்களாகும்.

கேள்விகளுக்கு, CMRL-ஐ 044-24378000 என்ற எண்ணில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் அல்லது hr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

 "ஆட்சேர்ப்பு செயல்முறை பற்றிய தகவலுக்கு http:// chennaimetrorail.org ஐ தவறாமல் பார்க்க வேண்டும்" என்று CMRL குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com