கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்
கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்

கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்... கோபப்பட்ட டிரம்ப்... பக்குவமாக டீல் செய்த கமலா ஹாரிஸ்!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான மோதலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஏபிசி தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

டொனால்ட் டிரம்ப் வேலை இழப்பை உருவாக்கிவிட்டுப் போனார்!

''டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகும்போது பெரிய குழப்பத்தை உருவாக்கிவிட்டுப்போனார். அவரால் அமெரிக்காவின் பொருளாதாரமே சரிந்துபோனது'' என கமலா ஹாரிஸ் குற்றம் சாட்ட, ''கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்'' என பதில் அளித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

சீனாவா, தைவனா?

டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு ‘அமெரிக்கன் மைக்ரோ சிப்ஸ்’ விற்றதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார். ஆனால், அவை தைவானில் தயாரிக்கப்பட்ட சிப்கள். ஏனென்றால் பிடேன் - ஹாரிஸ் அமெரிக்க உற்பத்தியை அழித்துவிட்டார்கள் என டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் பொய் சொல்கிறார் - டிரம்ப்

கருக்கலைப்பு தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடந்துவரும் கமலா ஹாரிஸ் பொய் சொல்வதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார் டிரம்ப்

காசு கொடுத்து கூட்டம் கூட்டுகிறார் கமலா - டிரம்ப்

டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கமலா ஹாரிஸ் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். கமலா ஹாரிஸ் கூட்டத்துக்கு காசு கொடுத்து மக்களை அழைக்கிறார். எனக்கு வரும் அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக மாற்றுவதற்காக, எனக்கு ஆதரவு அளிப்பதற்காக வருகிறார்கள்'' என டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

டிரம்ப்பை நேருக்கு நேராக குற்றம் சாட்டிய கமலா ஹாரிஸ்!

''டிரம்ப் இன்னொருமுறை ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவே அழிந்துவிடும்'' என டிரம்ப் அதிபரகாக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்தவரே பேட்டியளித்திருக்கிறார் என கமலா சொல்ல, ''ஒழுங்காக வேலை செய்யாதவர்களை நான் வேலையைவிட்டு தூக்கினேன். அவர்கள் எனக்காக பேசியதை எல்லாம் எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள்'' என டிரம்ப் பதில் அளித்தார்.

டிரம்ப் சொல்வது பொய் செய்தி என திருத்தம் செய்த டிவி தொகுப்பாளர்கள்!

கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் மோதும் டிவி விவாதத்தை நடத்திவரும் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் இருவரும் டிரம்ப் பேசும்போது சொன்ன பல தகவல்களின் உண்மைத்தன்மையை சோதித்து பொய்யான தகவல்களை மறுத்துவருகிறார்கள்.

சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் நாய், பூனைகளை சாப்பிடுகிறார்கள்!

‘’சட்டவிரோதமாகப் பலரையும் கமலா, பிடேன் அரசு அமெரிக்காவுக்கு உள்ளே வாக்குகளுக்காக உள்ளே கொண்டுவந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் பல சட்டவிரோதமான செயல்களை செய்கிறார்கள். நாய், பூனைகளை எல்லாம் சாப்பிடுகிறார்கள்’’ என்றார் டிரம்ப்.

கமலா ஹாரிஸ் : காசா போர் முடிவுக்கு வர வேண்டும்…. போர் நிறுத்த ஒப்பந்தமும், தீர்வும் தேவை!

"ஹமாஸ் அக்டோபர் 7 அன்று 1,200 இஸ்ரேலியர்களை படுகொலை செய்தது. இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு, ஆனால் பல அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டும். பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் தீர்வுக்கான பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்'' - கமலா ஹாரிஸ்

எல்லாருக்குமான அதிபர்! - கமலா

‘’நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருக்கவிரும்புகிறேன்’’ - கமலா ஹாரிஸ்

‘’ஏன் மூன்றரை ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை’’ - டிரம்ப்

பேசத்தொடங்கும்போது கமலா ஹாரிஸ் அதை செய்யப்போகிறேன், இதை செய்யப்போகிறேன் என்றார். ஆனால், மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கமலா ஹாரிஸும் அவரது கட்சியும் ஏன் இதுவரை எதுவும் செய்யவில்லை.

முடிவுக்கு வந்தது விவாதம்!

டொனால்ட் டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸூக்கும் இடையேயான டிவி விவாதம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்குத் தொடங்கிய விவாவதம் கிட்டத்தட்ட 1.45 மணி நேரங்கள் நீடித்தது. விவாதத்தின்போது கமலா ஹாரிஸைப் புறக்கணிக்கும் விதமாகவும், கோபமாகவும் பேசினார் டிரம்ப். ஆனால், கமலாவோ மிகவும் கூலாக, நிதானமாக பதில் அளித்தார். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸின் கையே ஓங்கியிருந்தததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
News Tremor
newstremor.com