சமூக வலை தள எச்சரிக்கை!
சமூக வலை தள எச்சரிக்கை!

இனி அப்ரூவல் இல்லாம யாருடைய போட்டோவையும் ஆன்லைன்ல போடாதீங்க... 3 ஆண்டு சிறை கன்ஃபர்ம்!

சமூகவலைதளங்களில் அனுமதியின்றி தனிநபர் யாருடைய போட்டோவையும், வீடியோவையும் பகிரக்கூடாது எனவும், அப்படி பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை எனவும் சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

சென்னை மாநகர காவல்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி சமூக வலைதளங்களில் தனிநபர் எவருடைய புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அவர்களது அனுமதியின்றி வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு
சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு

ஆன்லைனில் தனியுரிமையை மதிக்கவும் என தலைப்பிட்டு சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ‘’தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 3 லட்சம் ரூபாய் வரை அபராதம். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்’’ எனக் குறிப்பிட்டுள்ளது சென்னை பெருநகர போலீஸ். 

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66E பிரிவின்படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி வெளியிடுவது குற்றம் என்றும், இதுதொடர்பான சைபர்கிரைம் புகார்களுக்கு 1930 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com