செய்திகள்
ஃபேஸ்புக் பிரபலமான டாக்டர் சரவ்வின் மனைவி தனலட்சுமி திடீர் மாரடைப்பால் மரணம்!
ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் சரவ். மிகவும் இயல்பாகப் பேசுவதும், சிகிச்சையளிப்பதும் இவரது குணம் என்பதால் இவரை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்கிறார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்ட டாக்டர் சரவணனின் மனைவியும் அலோபதி டாக்டர்.
தேனியைச் சேர்ந்த பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சரவணன். ஃபேஸ்புக்கில் டாக்டர் சரவ் என்கிற பெயரில் இயங்கிவந்த இவரை பல ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இவரது மனைவியின் பெயர் டாக்டர் தனலட்சுமி. அலோபதி டாக்டரான இவருக்கு வயது 45.
நேற்றிரவு தூக்கத்திலேயே திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார் தனலட்சுமி. காலையில் குடும்பத்தினர் எழுப்ப, தனலட்சுமியின் உடலில் எந்த அசைவும் இல்லாமல் இருக்க, அதன்பின்னரே அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்திருக்கிறது.
டாக்டர் சரவணன் - தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு மகன், ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். டாக்டர் தனலட்சுமியின் திடீர் மரணம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.