சென்னை மழை
சென்னை மழை

இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை... கனமழை ஆபத்தில் இருந்து தப்பியது!

காற்றின் ஒருங்கிணைப்பு (convergence) தென் ஆந்திரா பகுதிகளுக்கு நகர்ந்ததால், சென்னை பெருமழையில் இருந்து தப்பியிருக்கிறது.
Published on

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் காற்றின் ஒருங்கிணைப்பு (convergence) சென்னையை விட அதிகமாக வடக்கில் இருக்கிறது. இதனால், சென்னையில் எதிர்பார்த்தபடி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. 

அதே நேரத்தில், சாதாரண மழை இன்று முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் ஒருங்கிணைப்பு தென் ஆந்திரா பகுதிகளுக்கு நகர்ந்ததால், சென்னை பெருமழையில் இருந்து தப்பியிருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்வதால் சில ‘புல் எஃபெக்ட்’ மழைகள் நிகழலாம். இவை சாதாரண மழைகளாகவே இருக்கும் என்பதால், மக்கள் அதைச் சமாளிக்க முடியும்.

எனவே, மக்கள் பதட்டமின்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அடுத்த இரண்டு நாள் மழையை சமாளிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com