செய்திகள்
சென்னையை நோக்கி மையமாகும் மழை மேகங்கள்… வடசென்னையில் பாதிப்பு அதிகம் இருக்கலாம்!
கடந்த ஆறு மணி நேரத்தில் சென்னையின் சில பகுதிகளில் மழை 15 சென்ட்டி மீட்டரை கடந்துள்ளது. குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது.
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த மேகங்கள் இப்போது ஒருங்கிணைந்து, தீவிரமடைந்து சென்னை மாநகரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், நகரம் முழுவதும் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை பெய்யத்தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆறு மணி நேரத்தில் சென்னையின் சில பகுதிகளில் மழை 15 சென்ட்டி மீட்டரை கடந்துள்ளது. குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் இந்த அளவு மழை பதிவாகியுள்ளது.
இப்போது சென்னை மாநகருக்குள் நுழையவுள்ள மழை நீண்ட நேரம் நீடிக்கக்கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வடசென்னையில் இரவு நேரத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 25 சென்ட்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகலாம்.
அத்தியாவசிய தேவைகளைத் தவிர வெளியில் தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.