ஆப்பிள் ஐபோன் 16
ஆப்பிள் ஐபோன் 16

ஆப்பிள் iPhone 16 Pro : ஸ்மார்ட்போனில் ஒரு சினிமாவே எடுக்கலாம்... என்ன விலை, எப்போது வாங்கலாம்?!

ஸ்மார்ட்போன்களில் முதல்முறையாக ஸ்கீரினில் இல்லாமல் ஃபிஸிக்கல் பட்டனாக கேமரா ஷட்டர் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேமரா கன்ட்ரோல் கேப்பாசிட்டிவ் ஸ்லைடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த பட்டனால் போட்டோ எடுக்கும்போது ஸ்கிரீனைத் தொடவேண்டிய அவசியமே இல்லை.
Published on

செப்டம்பர் வந்தாலே ஐபோன் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். காரணம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆப்பிள் நிகழ்வுதான். செப்டம்பர் 9-ம் தேதியான நேற்று ஆப்பிளின் 2024-ம் ஆண்டுக்கான நிகழ்வு நடந்தது. இதில் ஐபோன் 16 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனோடு ஏர்பாட்ஸ் 4, ஆப்பிளின் ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ், ஐவாட்ச் 10 ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆப்பிள் ஐபோன் 16-ல் என்ன ஸ்பெஷல்?!

பார்ப்பதற்கு ஐபோன் 15 போலவே இருந்தாலும் ஐபோன் 16-ல் பல அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறது ஆப்பிள். ஐபோன் 16 டெஸ்க்டாப் கணினிகளுக்கு இணயான பர்ஃபாமென்ஸைத் தரும் வகையில் டெக்னிக்கலி ஸ்ட்ராங்காக இருக்கிறது. DSLR கேமராக்களை முந்தும் கேமரா திறன்களையும் கொண்டுள்ளது. வீடியோகிராஃபர்களுக்கெனவே சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதோடு அதிநவீன ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது ஆப்பிள் 16.

ஆப்பிள் ஐபோன் 16
ஆப்பிள் ஐபோன் 16

சிப்பில் இருந்து கேமரா வரை எல்லாமே AI

 புதிய A18 ப்ரோ சிப் மூலம் இயங்கும் ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிளின் அட்டகாசமான செயற்கை நுண்ணறிவு (AI) திறனைக் கொண்டிருக்கிறது. மற்ற ஸ்மார்ட்போன்களைப் போல் சில பகுதிகளுக்கு மட்டும் AI தொழில்நுட்பம் இல்லாமல் போனின் முழு செயல்பாட்டுக்குமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ராசசர் முதல் கேமரா கன்ட்ரோல் வரை எல்லாவற்றையுமே ஏஐ மூலம் இயக்கமுடியும். ஆப்பிளின் ஆட்டோ வாய்ஸ் தொழில்நுட்பமான  Siri-யும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

போன் கேமராவா… DSLR கேமராவா?

ஸ்மார்ட்போன்களில் முதல்முறையாக ஸ்கீரினில் இல்லாமல் ஃபிஸிக்கல் பட்டனாக கேமரா ஷட்டர் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கிறது.கேமரா கன்ட்ரோல் கேப்பாசிட்டிவ் ஸ்லைடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த பட்டனால் போட்டோ எடுக்கும்போது ஸ்கிரீனைத் தொடவேண்டிய அவசியமே இல்லை. ஷட்டர் ஸ்பீடு, ஸூம், எக்ஸ்போஷர், அபர்ச்சர் போன்றவற்றை இந்த பட்டன் மூலமே கட்டுப்படுத்த முடியும். இதன்மூலம் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் உள்ள ரிங் பட்டனைப் பயன்படுத்துவது போன்ற அனுபவத்தைத் தருகிறது ஐபோன் 16. மேலும் ஸ்கீரினுக்குள் செல்லாமலேயே இந்த பட்டனை அழுத்திவிட்டு போட்டோ, வீடியோக்களை நேரடியாக எடுக்கமுடியும். 48 மெகா பிக்ஸல் ஃப்யூஷன் கேமாராவில் இரண்டு கேமராக்கள் இணைந்திருப்பதால் போட்டோக்கள் மிகவும் துல்லியமாக உள்ளன. 

ஆப்பிள் ஐபோன் 16
ஆப்பிள் ஐபோன் 16

சினிமாவே எடுக்கலாம்!

ஐபோன் 16 ப்ரோ மாடல்கள், தொழில்முறை வீடியோகிராஃபர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 4K வீடியோவை, 120 ஃபிரேம்களில் (FPS) பதிவுசெய்யும் திறன் கொண்டுள்ளது ஐபோன் 16 ப்ரோ கேமரா. இந்த போனை வைத்து ஒரு சினிமாவையே எடுக்கமுடியும். அதேப்போல் திருமண நிகழ்ச்சிகள், மிகப்பெரிய ஈவென்ட்டுகள் என எதையுமே இந்த போனைக்கொண்டு ஒளிப்பதிவு செய்யமுடியும்.

ஆப்பிள் ஐபோன் 16
ஆப்பிள் ஐபோன் 16

என்ன விலை, எப்போது வாங்கலாம்?!

புதிய ஐபோன் 16 சீரிஸ் செப்டம்பர் 20 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. வரும் 13-ம் தேதி முதல் புக்கிங் செய்யலாம். விலையைப் பொருத்தவரை ஐபோன் 15 போலவே ஐபோன் 16 போன் 79,900 ரூபாயில் இருந்தும், ஐபோன் 16 ப்ளஸ் 89,900 ரூபாயில் இருந்தும் தொடங்குகிறது. ஐஓஎஸ் 18 அப்டேட் வரும் செப்டம்பர் 16 முதல் ஐபோன் பயனாளர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது ஆப்பிள்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com