கலைஞர் நூற்றாண்டு பூங்கா
கலைஞர் நூற்றாண்டு பூங்கா

சென்னையில் திறக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா... என்ன ஸ்பெஷல்?!

சென்னை கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே இன்னொரு பூங்காவாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறக்கப்படுகிறது.
Published on

சென்னையில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். 46 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்கா கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கே எதிரே அமைந்துள்ளது.

தோட்டக்கலை அருங்காட்சியகம், ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி பயணம், பார்வையாளர்களைப் படம்பிடிக்கும் கலைக்கூடம், தொடர்கொடி வளைவுப்பாதை, 21 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை, வெளிநாட்டுப் பறவைகளின் பறவையகம், மர வீடு, காய்கறித்தோட்டம் சிற்றுண்டி உணவகம், சுவரோவியம் எனப் பல ஸ்பெஷல் அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பூங்கா.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா
கலைஞர் நூற்றாண்டு பூங்கா

இன்ஸ்டாகிராம் போட்டோஸ், ரீல்ஸ், ஷார்ட்ஸ் எடுக்கப் பல போட்டோஜெனிக் அழகிய இடங்கள் இந்தப் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறுவர்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. போட்டோ கேமராவுக்கு 100 ரூபாயும், வீடியோ கேமராவுக்கு 5000 ரூபாயும் கட்டணம். இதுத்தவிர உள்ளே உள்ள ஜிப்லைன், பறவைகள் சரணலாயம் உள்ள பகுதிகளுக்கு தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நுழைவுச் சீட்டுகளை இந்த லிங்க்கின் ஆன்லைனிலேயே வாங்கலாம். https://tnhorticulture.in/kcpetickets

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com