டிரம்ப்புக்கு எதிராகப் பெருகும் LOCK HIM UP கோஷம்… அட்லான்ட்டாவில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு!
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்க இருக்கும் கமலா ஹாரீஸ் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அட்லான்ட்டாவில் நடைபெற்ற கூட்டதில் தேர்தல் பிரசார உரை நிகழ்த்தினார்.
நானும் டொனால்ட் டிரம்ப்பும் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து நேர் எதிர் பார்வையைக் கொண்டிருக்கிறோம். நான் வழக்கறிஞராக இருந்த காலத்தில் எல்லா விதமான குற்றவாளிகளையும் சந்தித்திருக்கிறேன்.
‘’பெண்களை வேட்டையாடுபவர்கள், தவறாகப் பயன்படுத்துபவர்கள், பண மோசடிக்காரர்கள், சுயலாபத்துக்காக சட்ட விதிகளை மீறுபவர்கள் எனப் பல வகையான மனிதர்களை நான் பார்த்திக்கிறேன். இதில் டொனால்ட் டிரம்ப் எந்த வகை என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும்'’ என கமலா ஹாரிஸ் பேச 2000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த கூட்டத்தில் LOCK HIM UP என்கிற கோஷம் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது.
‘’டொனால்ட் டிரம்ப்பும் அவருக்குத் துணையாக போட்டியிடுபவரும் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய மறுக்கிறார்கள். ஆனால், எல்லா கூட்டங்களிலும் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள். என்னிடம் நீங்கள் எதாவது சொல்ல விரும்பினால் எனது முகத்துக்கு நேராகச் சொல்லுங்கள்'’ என்றார் கமலா.
கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு கூட்டத்தை கூட்ட அமெரிக்க ராப் பாடகி மீகன் ஸ்டாலியன் தீ-யின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.