கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது... பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கலை ஆசிரியராக பணியாற்றி வரும் ராமச்சந்திரா சோனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா சோனி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் வந்ததை அடுத்து உடனடியாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதைதொடர்ந்து காவல்துறையினர் ஆசிரியர் ராமச்சந்திரா சோனியை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் ஏற்கெனவே அவர் பல மாணவிகளுக்கு இதே போன்ற பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததுள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளியிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உள்பட நான்கு பிரிவுகளில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.