கென்யா விமான நிலையம்
ஸ்தம்பித்த கென்யா விமான நிலையம்

அதானியால் வெடித்த போராட்டம்...கென்யாவின் விமான சேவை பாதிப்பு

வங்கதேசத்தில் நஷ்டம், கென்யாவில் தடை என பின்னடைவை சந்தித்திருக்கும் அதானி குழுமம், சீன சந்தையில் தொடங்கியுள்ள புதிய செயல்பாட்டை வெற்றிகரமாக நடத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Published on

இந்தியாவின் வர்த்தக ஜாம்பவானான அதானி குழுமத்திற்கு எதிராக கென்யாவில் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதானி குழுமம் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மிக வேகமாக கால்பதித்து வருகிறது. உலகம் முழுவதும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வளர்ந்து வரும் நாடுகளை குறிவைத்து, அங்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை கைப்பற்றி வர்த்தகத்தை வளர்த்து வருகிறது.

Adani
அதானி

சமீபத்தில் வங்கதேசத்தில் மிக முக்கியமான மின்துறை திட்டத்தை கைப்பற்றி செயல்படுத்தி வந்தது. ஆனால் அங்கு ஆட்சி கவிழ்ப்பால் அதானி குழுமத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதானி குழுமம் சமீபத்தில்,  கென்யாவில் ஒரு உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றி அதனை செயல்படுத்த திட்டமிட்டது. ஆனால் அந்நாட்டு தொழிலாளர்கள் அதற்கு முட்டுகட்டை போட்டுள்ளனர். 

கென்யாவின் தலைநகரமான நைரோபியில் அமைந்துள்ள மிக முக்கியமான விமான நிலையத்தில் நேற்று நடந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கென்யா ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், கென்யாவில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் கிடைக்காமலும், விமானம் ரத்து செய்யப்படுவதாலும், தாமதமாக விமானம் வருவதாலும் பயணிகள் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளனர்.

கென்யாவின் ஜோமோ கென்யாட்டோ விமான நிலையம்
கென்யாவின் ஜோமோ கென்யாட்டோ விமான நிலையம்

கென்யாவின் ஜோமோ கென்யாட்டோ எனும் சர்வதேச விமான நிலையத்தை புதுப்பித்தல், கூடுதல் ஓடுதளம் அமைத்தல் மற்றும் புதிய முனையம் அமைத்தல் உட்பட 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க அதானி நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது கென்யா அரசு. இந்த ஒப்பந்தத்திற்கு கென்யா விமான தொழிலாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமென அஞ்சுவதால், திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது கென்யா விமான தொழிலாளர்கள் சங்கம்.

விமானநிலையத்தில் வசதிகள் குறைவாக இருப்பதால் நவீனமயமாக்க வேண்டும் என்பதே நோக்கம். விற்பனை செய்வது அல்ல என்று கென்யா அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த போராட்டத்தினால் அதானியுடனான கூட்டாண்மை தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், விமானநிலையத்தின் வெளியே விமான நிலைய ஊழியர்கள் பிளாஸ்டிக் விசில்களை ஊதி, ‘ அதானி வெறியேறு’ என்று கேஷமிட்டனர். அப்போது, போலீஸார் தடியடி மேற்கொண்டனர். இந்த காட்சியானது கென்யாவின் உள்ளூர் தொலைக்காட்சியான சிட்டிசன் டிவி-யில் ஒளிபரப்பட்டது. அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கென்யாவில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான (Jomo Kenyatta International Airport) நிலையத்தை அதானி குழுமம் குத்தகைக்கு எடுக்கும் திட்டத்திற்கு கென்யாவின் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

பைனான்சியல் டைம்ஸின் செய்தி அறிக்கையின்படி, ``கென்யாவின் உயர் நீதிமன்றம் நைரோபியின் முக்கிய விமான நிலையத்தின் நிர்வாகத்தை அதானி குழுமத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

gautam adani
gautam adani

வங்கதேசத்தில் நஷ்டம், கென்யாவில் தடை என பின்னடைவை சந்தித்திருக்கும் அதானி குழுமம், சீன சந்தையில் தொடங்கியுள்ள புதிய செயல்பாட்டை வெற்றிகரமாக நடத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ``அதானி எனர்ஜி ரிசோர்சஸ் ஷாங்காய் கம்பெனி” என்ற துணை நிறுவனத்தை நிறுவி சீனாவில் பொருட்கள் விநியோக சங்கிலிக்கான தீர்வுகளையும் திட்ட மேலாண்மை சேவைகளையும் வழங்க உள்ளது. 


கென்யாவில் விமான நிலைய உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் செய்தது போலவே, அபுதாபியில் `குளோபல் ஏர்போர்ட் ஆப்பரேட்டர்’ என்ற துணை நிறுவனத்தை அமைத்து அங்கும் விமான நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளது. 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com