டாஸ்மூலம் வரும் வருமானமோ ஆண்டுக்கு 44 ஆயிரம் கோடி… மறுவாழ்வுக்கு செலவு செய்வதோ வெறும் 5 கோடி!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் சமூக விமர்சகர்கள், இலக்கியவாதிகள், திரைக்கலைஞர்கள் எனப்பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதில் இயக்குநர் பா.இரஞ்சித்தும், நடிகர் சூர்யாவும் தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் மறுவாழ்வு முகாம்களைத் திறக்கவேண்டும், குடிநோயளிகளுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருந்தார்கள். இந்ந சூழலில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் டாஸ்மாக்கால் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் தமிழக அரசு, மறுவாழ்வுக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என வெளியாகியிருக்கும் புள்ளி விவரம் அதிர்ச்சியக்கிறது.
2022-23-ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 44,121 கோடி வருமானம் பெற்ற தமிழக அரசு அதில் இருந்து 0.01 சதவிகிதம் அதாவது 500 கோடி ரூபாய் மட்டுமே குடிமக்களின் மறுவாழ்வுக்கென செலவு செய்திருக்கிறது.
‘’டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அதாவது 441 கோடி ரூபாய் செலவு செய்தாலே மறுவாழ்வு மையங்கள் சிறப்பாக செயல்படும். குடிநோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படு அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்'’ என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன்.
தினமும் சட்டசபையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநோயளிகளின் நல்வாழ்வுக்கான திட்டத்தையும் அறிவிக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!