Nirmala Sitharaman with president Droupadi Murmu and Minister of State for Finance Shri Pankaj Chaudhary
பட்ஜெட் 2024 : மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, குடியரசுத்தலைவர் தெரளபதி முர்மு, நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live : மோடி ஆட்சி தொடர உதவும் பீகார், ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு சலுகைகள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். தற்போது பாஜக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் 2024/25-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்!

பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்து ஒப்புதல் பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன். குடியரசுத்தலைவர் அமைச்சருக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் 7-வது பட்ஜெட்!

மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து தொடர்ந்து ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் 2024 : பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். இந்தியாவின் வளர்ச்சி மிகச்சீராக இருப்பதாகப் பெருமிதம்!

1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் 2024 : இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இயற்கை விவசாயம்!

1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திருப்பிவிடப்படுவார்கள்.

10 லட்சம் கல்விக் கடன்!

உள்ளூர் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

பீகார், ஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு சலுகைகள்!

மோடி 3.0 அரசு ஆட்சியில் தொடர காரணமாக இருக்கும் நித்திஷ் குமார் ஆட்சியில் இருக்கும் பீகாருக்கும், சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் ஆந்திர பிரதேசத்துக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

3 கோடி வீடுகள்!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட நிதி வழங்கப்படும்.

பீகாருக்கு 26 ஆயிரம் கோடி!

பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள், ஸ்டேடியங்கள் கட்ட 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. வெளிநாடுகளில் இருந்து கடன்பெற்று பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யவும் உறுதி.

இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் திட்டம்!

இளைஞர்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் முறையில் வேலை வழங்கப்பட்டும் மாதம் 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் இல்லை?!

பீகார், அசாம், உத்தராகண்ட் மாநிலங்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வெள்ளத்தை தடுக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யும் எனவும் அறிவிப்பு. ஆனால், கடந்த ஆண்டு வெள்ளத்தால் சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்டபோதும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை.

பீகார், ஒடிசாவில் கோயில்களுக்கு சிறப்பு நிதி!

பீகார், ஒடிசாவில் உள்ள பழமையான கோயில்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் சிறப்பு நிதி ஒதுக்கீடு!

தொடர்ந்து இறங்குமுகத்தில் பங்குச்சந்தை!

பட்ஜெட் அறிவிப்பு வெளியாகிவரும் நிலையில் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட பங்குச்சந்தை மார்க்கெட் இறங்குமுகமாகவே இருக்கிறது.

இதுவரை தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை!

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் தமிழ்நாட்டுக்கென எந்த சிறப்பு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

விலை குறையும் செல்போன்கள்

செல்போன், செல்போன் சார்ஜர்களுக்கான உற்பத்தி வரி 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும்.

கேன்சர் மருந்துகளுக்கு வரிவிலக்கு!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

விலை குறையும் தங்கம்

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் மீதான வரி அதிகரிப்பு!

பிளாஸ்டிக் மீதான சுங்கவரி உயர்த்தப்படுகிறது.

ஏஞ்சல் வரி நீக்கம்!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுவந்த ஏஞ்சல் வரி முழவதுமாக நீக்கம்!

வருமான வரி!

3 லட்சம் வரை வருமானம் பெறும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை. 15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிப்பு! 3-7 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு 5 சதவிகிதமும், 7-10 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவிகிதமும், 10-12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவிகிதமும், 12-15 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவிகிதமும் வருமான வரி விதிப்பு

எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை… சரிவை சந்தித்த பங்குச்சந்தை!

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்திருக்கும் நிலையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது பங்குச்சந்தை!

logo
News Tremor
newstremor.com