சான் பிரான்சிஸ்கோவில் ஸ்டாலின் செம ஹேப்பி... 4100 பேருக்கு வேலை, 900 கோடி முதலீடு என பெருமிதம்!
17 நாள் முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதலீட்டாளர்களை சந்தித்தார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் பேபால், நோக்கியா, மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டிருக்கிறார்.
‘’சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், இனிவரும் நாட்களுக்கான ஒரு நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ₹900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள், பல துறைகளில் 4,100 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.
🔹 நோக்கியா - ₹450 கோடி, 100 வேலை வாய்ப்புகள்
🔹 பேபால் - 1,000 வேலைகள்
🔹 ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் - ₹150 கோடி, 300 வேலைகள்
🔹 மைக்ரோசிப் - ₹250 கோடி, 1,500 வேலைகள்
🔹 Infinx - ₹50 கோடி, 700 வேலைகள்
🔹 அப்ளைடு மெட்டீரியல்ஸ் - 500 வேலைகள்
இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்’’ என மு.க.ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.