பா.இரஞ்சித் நடத்திய ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி... ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு!
ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை தொடர்பாக 14 பேர் கைதான நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் இறந்த 16-வது நாளான இன்று சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி ராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாக சென்று நினைவேந்தல் கூட்டத்திற்கு வருகை தருமாறு இரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நினைவேந்தல் பேரணியை நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் பா.இரஞ்சித் முன்நின்று நடத்தினார். இந்த நினைவேந்தல் பேரணியில் நடிகர் மன்சூர் அலிகான், பாடகர் அறிவு போன்ற திரை பிரபலங்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொன்றனர். இதில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிவேண்டி பேரணியில் "ஜெய் பீம்" என்ற முழக்கம் ஆயிரக்கணக்கில் ஒலித்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட இந்த பேரணியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சுமார் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.