தாய்லாந்து பிரதமரான இளம் பெண்... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?
தாய்லாந்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக பொறுப்பேற்றவர் ஸ்ரெத்தா தவிசின். இவரது அமைச்சரவையில் பிச்சித் என்ற வழக்கறிஞர் சேர்க்கப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் தக்சினின் உறவினராவார். இவர் கடந்த 2008-ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்புக்காக 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர். இதனால் இவரது நியமனத்தை எதிர்த்து முன்னாள் செனட் உறுப்பினர்கள் 40 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதில் பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்ய 5 நீதிபதிகள் ஓட்டளித்தனர். அவர்கள் கூறிய தீர்ப்பில், “அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித் ஒழுங்கீனம் காரணமாக சிறை தண்டனை பெற்றவர் என்பதை அறிந்தும், அவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நியமித்தன் மூலம் அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறை விதிகள் மீறப்பட்டுள்ளது என பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்” என்று அறிவித்தனர்.
அதன் பிறகு பியூ தாய் கட்சியில் இருந்து புதன்கிழமையன்று பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரது மகள் பேடோங்டார்ன் பரிந்துரைக்கப்பட்டு தாய்லாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 37 வயதே ஆகும் பேடோங்டர்ன் ஷினவத்ரா தாய்லாந்து வரலாற்றில் பிரதமர்களின் வரிசையில் முதல் இளம் தலைவராகவும், இரண்டாம் பென் பிரதமராகவும் திகழ்கிறார்.
பாங்காக்கில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேடோங்டர்ன் “தான் கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் உனர்வதாக" கூறினார். மேலும் “நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று பேட்டியளித்திருக்கிறார்.