கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த பேராசியர்கள்; பாளையங்கோட்டையில் பரபரப்பு

கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த பேராசியர்கள்; பாளையங்கோட்டையில் பரபரப்பு

நெல்லையில் கல்லூரி மாணவியை, மது அருந்த அழைத்ததாக எழுந்த புகாரில் ஒரு பேராசிரியர் கைது. மற்றொரு பேராசிரியரை தேடி வருகிறது பாளையங்கோட்டை காவல்துறை.
Published on

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த 2 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் 'தூய சவேரியார்' என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு, தனியார் விடுதியில் மது அருந்திய அந்த கல்லூரியின் பேராசிரியர்களான ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40)ஆகியோர் இரவில் மதுபோதையில் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசி கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனே பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பேராசிரியர் ஜெபஸ்டினை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், தனியார் கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த 2 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

சமீப காலமாக கல்லூரி மானவிகள் மீதான பேராசிரியர்களின் பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை மற்றும் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மானவிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டிய பேராசிரியர்களே மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் அவலம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com