ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி... அதிநவீன இருதய சிகிச்சை செய்ய முடிவு!
நேற்று நள்ளிரவு (செப்டம்பர் 30) 73 வயதான நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வயிறு செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்துக்கு ஏற்கெனவே கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்துவந்த ரஜினிகாந்துக்கு கடந்த சில நாட்களாக உணவு செரிமான பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துவந்த ரஜினிகாந்துக்கு நேற்றிரவு வயிற்றுவலி கடுமையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப்பரிசோதித்த டாக்டர்கள் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதற்காக இன்று ரஜினிகாந்த்துக்கு இருதய பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இதய அடைப்பை நீக்க அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகத் தெரிகிறது.
ரஜினிகாந்த் உடல்நிலையை கேட்டறிருந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ''நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன்'' என சமூக ஊடகங்களில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.