ரஜினிகாந்த்துக்கு இரத்த நாள சிகிச்சை வெற்றி... இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என அறிவிப்பு!
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செரிமானப் பிரச்சனைக் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு இரத்த நாள வீக்கத்துக்கான அதி நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலன் பற்றியும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பற்றியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அப்பல்லோ நிர்வாகம்.
அதில், ‘ரஜினியின் இதயத்தில் இருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் பிரச்சனையை சரி செய்துள்ளோம். மூத்த இதயவியல் மருத்துவர் நிபுணர் சாய் சதீஷ் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்'' எனத் தெரிவித்துள்ளனர்.