NEET தேர்வு
NEET தேர்வு

ரத்தாகுமா NEET தேர்வு? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!
Published on

இந்த ஆண்டு நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதை ரத்து செய்யவேண்டும் எனவும் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில் நீட் தேர்வை ரத்து செய்ய கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில் சிபிஐ சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஜுலை 18 அதாவது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

NEET தேர்வு
NEET தேர்வு மோசடி… எளியமுறையில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!


கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. அதன்பிறகு, ஜூன் 4-ம்தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகி இருந்தன. அதாவது தேர்வுக்கு முன்பாகவே நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. மேலும் 1500க்கும் அதிகமானவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதும் விவாதத்தை கிளப்பியது. அதைத்தொடர்ந்து, 67 பேருக்கு முழு மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஆள்மாறாட்ட புகாரும் எழுந்தது.

இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மாற்று தேதியில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் எழ பல இடங்களில் மாணவர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள 30-க்கு மேற்பட்ட வழக்குகள் கடந்த 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடப்பெற்றது. அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. உச்சநீதிமன்றம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசாரணைப்பட்டியலின்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com