ஸ்டாக் மார்க்கெட் : 15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு… இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன?!
ஜப்பான் மார்க்கெட்டின் கடுமையான வீழ்ச்சி!
ஜப்பானின் பங்குச்சந்தையான நிக்கி, அந்த நாட்டின் நாணயமான யென்னின் வீழ்ச்சியால் வரலாறு காணாத சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவால் பங்குச்சந்தை வர்த்தகமே நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறாது. ஜப்பானின் பங்குச்சந்தை வீழ்ச்சிதான் உலகம் முழுக்க உள்ள பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.
இஸ்ரேல் - ஈரான் போர் சூழல்!
இஸ்ரேல் - ஈரானிடயே எந்த நேரம் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்கிற பதற்றமான சூழல் நிலவுவது பங்குச்சந்தை சரிவுக்கான மிக முக்கியக் காரணம். ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயின் ஹனியேவின் படுகொலையில் அமெரிக்காவின் நிலைப்பாடும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதால் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் மறைமுக ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்தப் போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துவருகிறது.
அமெரிக்காவின் எதிர்காலம்?!
வெள்ளிக்கிழமையே பங்குச்சந்தை சரியும் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்துவிட்டன. எதிர்பார்த்ததைவிடவும் அமெரிக்காவின் பங்குச்சந்தையான நாஸ்டாக் 2.43 சதவிகிதம் சரிந்து 16,776ல் முடிந்தது. இது அதன் உச்சபட்ச உயர்வில் இருந்து 10 சதவிகிதம் சரிவு. இதனின் எதிரொலிதான் இன்றைய இந்திய பங்குச்சந்தையின் சரிவும். அமெரிக்காவின் ட்ரெஷரி எனச்சொல்லப்படும் அமெரிக்க கருவூலத்தின் வருவாயானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்திருப்பதுதான் அமெரிக்கா ஸ்டாக் மார்க்கெட் ஆட்டம் காணுவதற்கான காரணம்.
பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதாவது அமெரிக்காவில் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும் வரையில் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேப்போல் ஈரான் - இஸ்ரேல் போர்ச்சூழலும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும்!
உஷாராகிக்கோங்க மக்களே!