A lesson on Bollywood actress Tamannaah Bhatia in a school textbook sparks a row, raising questions about the appropriateness of including contemporary celebrities in educational materials.
தமன்னா

பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா… வலுக்கும் எதிர்ப்பும், பள்ளி சொல்லும் காரணமும்!

Published on

தனது நடிப்புத்திறன் மற்றும் அழகால் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர் நடிகை தமன்னா பாட்டியா. ‘’காவாலய்யா’’ பாடல் மூலம் கடந்த ஆண்டு ட்ரெண்ட் ஆனவர், இப்போது பள்ளிப்பாடப்புத்தக்கதில் இடம்பெற்று சர்ச்சையாகியிருக்கிறார்.

கர்நாடகாவின் பெங்களூரு ஹெப்பாலாவில் உள்ள 'சிந்தி' உயர்நிலை பள்ளியில் நடிகை தமன்னா பற்றிய ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.  'சிந்தி' என்பது மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு சமூகத்தின் பெயர். நடிகை தமன்னா சிந்தி சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகையைப் பற்றிய பாடம் எப்படி இடம்பெறலாம் என ஏழாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

A lesson on Bollywood actress Tamannaah Bhatia in a school textbook sparks a row, raising questions about the appropriateness of including contemporary celebrities in educational materials.
தமன்னா

சிந்தி சமூகத்தினரால் நடத்தப்படும் பள்ளி என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையில் தமன்னா பற்றிய குறிப்பு பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது பள்ளி நிர்வாகம். சிந்தி சமூகத்தைப் பற்றிய ஆய்வுகளின் ஒரு பகுதியாக இந்த பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது! 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com